மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணையைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சாக்கரடீஸ் (26) என்பவர் கடந்த 27 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரைப் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது மனைவி நேற்று அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கணவர் மாயமானது குறித்துப் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன நபரைத் தேடி வருகின்றனர்.