சோழவந்தான் அருகே கன்னிமார் கோயில் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக காடுபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் விக்கிரமங்கலத்தை அடுத்த நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி மகன் ராஜேந்திரன் என அடையாளம் கண்டனர். நரியம்பட்டியில் மளிகை கடை நடத்தி வந்த ராஜேந்திரன், சோழவந்தானில் பொருட்கள் வாங்க வந்தபோது கன்னிமார் கோவில் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.