சாலை விபத்தில் கார் டிரைவர் பலி.

6பார்த்தது
சாலை விபத்தில் கார் டிரைவர் பலி.
மதுரை சிக்கந்தர்சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் (39), நேற்று முன்தினம் (பிப். 28) கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தை கடந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பால் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால் வேன் டிரைவர் செல்லப்பாண்டி படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாடிப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி