மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (63) என்பவர், கடந்த மாதம் 15-ந்தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு பரமக்குடிக்குச் சென்றார். நேற்று (டிச. 1) மதியம் வீடு திரும்பியபோது, கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 45 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.