மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் அரிய வீரஸ்வாமி, ஓம் கும்பத்து மாரியம்மன், வல்லாந்திருவரசு ஐயன், ஓம் பார்வதி பத்தினி அம்மன் ஆகிய திருக்கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் சாமி பெட்டி வீட்டில் கணபதி ஆகவும், கோவிலில் கணபதி ஆகம், 2ம் நாள் கிராம தேவதை சாமி வழிபாடு, வழிகாட்டுக்கு சென்று தீர்த்தம் எடுத்து, பெட்டி வீட்டிற்கு வருதல், 3ம் நாள் விக்னேஸ்வர பூஜை, கடம் புறப்பாடு, புனித தீர்த்தங்களை அழைப்பு செய்தல் நடைபெற்றன. அன்று மாலை முதல் காலையாக பூஜை, 4ம் நாள் கோபுர கலசம் பிரதிஷ்டை, சிவ மூர்த்திகள் பிரதிஷ்டை செய்தல், பாலிகை பூஜை நடைபெற்றது. 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை, இரவு பெட்டி வீட்டில் இருந்து புனித தீர்த்தமும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்து அடைந்தனர். 5ம் நாள் காலை கோ பூஜை, பொங்கல் வைத்து விக்னேஸ்வர பூஜை, 4ம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி சாற்றுமுறை, பங்காளிகள் நலன் வேண்டி பிரார்த்தனை நடந்தது.
பின்னர் மேள காலத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து வந்தனர். பின்னர் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.