சோழவந்தான்: ராஜ் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

0பார்த்தது
சோழவந்தான்: ராஜ் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. வேத மந்திரங்களுடன் குடம் குடமாக கலசங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம். எல். ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி