மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் அறுவடை முடிந்து, கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிகாரிகள் திடீரென நெல் கொள்முதலை நிறுத்தியுள்ளனர். இதனால் சுமார் 4000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளன. விவசாயிகள் மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் நிறுத்தம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.