மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் இன்று (ஜன. 1) ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அர்ச்சகர் சண்முக வேல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி மற்றும் கணக்கர் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் செய்து இருந்தனர்.