சோழவந்தான்: கதம்ப வண்டுகள்.. உயிர் பலியை தடுக்க கோரிக்கை

1232பார்த்தது
சோழவந்தான்: கதம்ப வண்டுகள்.. உயிர் பலியை தடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் பிரதான சாலை ஓரத்தில், கடித்தால் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கதம்ப வண்டுகளின் பெரிய கூடு ஒன்று காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படும் முன்பாக, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக இந்த வண்டுக்கூட்டை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி