மதுரை அருகே சமயநல்லூர் - பரவை மேலவெளி வீதியை சேர்ந்த பி. காம். மூன்றாம் ஆண்டு மாணவி தேவிஸ்ரீ (19) நேற்று (ஏப்ரல். 7) மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் திருமணம் ஆன இவருக்கு, திருமணமான ஒரு மாதத்திலேயே நடந்த இந்த மரணம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.