மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (37) என்பவர் கொத்தனார்
வேலை பார்த்து வந்தார். கோச்சடையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில்
வேலை செய்து கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாடக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.