மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான இன்று (மே. 26) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். நாளை மாலை பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.