சாலை விபத்தில் டிரைவர் பலி.

6பார்த்தது
சாலை விபத்தில் டிரைவர் பலி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தைச் சேர்ந்த பூவலிங்கம் (37) என்பவர் மதுரையில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திண்டுக்கல்-மதுரை சாலையில் பரவை கண்மாய் அருகே எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்ரவரி 26) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி