அலங்காநல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை

988பார்த்தது
அலங்காநல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பொதும்பு வானவில் சிட்டி பகுதியில் வசிக்கும் சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி ரினோ நேற்று (மே. 28) மதியம் கொடைக்கானலில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி