சாலை விபத்தில் மனைவி கண் முன் கணவர் பலி.

1பார்த்தது
சாலை விபத்தில் மனைவி கண் முன் கணவர் பலி.
மதுரை தெற்குதெரு கோட்டைமேடு கல்லானையைச் சேர்ந்த பூமிநாதன் (67) தனது மனைவி சங்கீதாவுடன் இருசக்கர வாகனத்தில் கோட்டை மேடு ராமசாமி பாலம் அருகே சென்றபோது, வாடிப்பட்டி தனிச்சியம் வடுகபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(43) என்பவர் ஓட்டிச் சென்ற வேன் மோதியதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மனைவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.