மதுரை மாவட்டம் சோழவந்தான் தேனூர் கிராமத்தில் அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று (மே. 27) கணபதி பூஜையுடன் தொடங்கியது. நான்கு கால பூஜையைத் தொடர்ந்து, காலை கடம் புறப்பாடாகி, புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.