மதுரை: காவல்துறை வாகனம் மோதி 3 பேர் பலி

1937பார்த்தது
மதுரை: காவல்துறை வாகனம் மோதி 3 பேர் பலி
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர், பைக்கில் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சக்குடி அருகே எதிரே வந்த காவல்துறை வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் உடல்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல்துறை வேன் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி