மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தம்பதி சமேதரராய் ஊஞ்சலில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் ஏராளமானோர் வழிபாடு செய்தனர். உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளையடுத்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்த பெருமாளுக்கு பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டன.