மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி, பிரதமர் வருகையின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, குடும்ப வறுமையால் அடகு வைத்த தாலியை மீட்க முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலை புதிய தாலி வாங்கி வழங்கினார். நேற்று அவரது கணவர் அந்தப் பெண்ணிற்கு புதிய தாலியை அணிவித்தார். பழைய தாலியை விட புதிய தாலி எடை அதிகமாக இருந்தது.