மதுரை: பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது.

3பார்த்தது
மதுரை: பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது.
மதுரை அலங்காநல்லுார் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணுக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சமயநல்லுார் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பெண் ஆடு மேய்க்கச் சென்றபோது, முதியவர் உடும்பன் என்ற ஆறுமுகம் (64) அவரை பாலியல் வன்கொடுமை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி