மதுரை பாலமேடு அருகே தேவசேரியைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி பாண்டி (32), மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்து, தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துக் கொடுத்தார். குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று (நவ. 10) காலை பாண்டி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.