மதுரை: தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சி

696பார்த்தது
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நிதி திரட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியினர் இந்துத்துவ கொள்கையை திணிப்பதாகவும், மதமாற்றம் செய்வதாக பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது திமுக கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அவர் கூறினார்.