மதுரை: உயர்கல்வி சேர்க்கை: அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை

0பார்த்தது
மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  வரும் ஜூன் முதல் வாரத்தில் உயர்கல்வி சேர்க்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் ஜோசப் விஜயே எடுப்பார் என்றும், கடந்த அரசின் கொள்கை முடிவுகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் நிலைப்பாடுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. 5 ஆண்டுகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நிலைத்து நிற்கும் என்றும், முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி