மதுரை: வீட்டில் தீ விபத்து நெஞ்சில் அடித்து கதறும் கூலித்தொழிலாளி

4பார்த்தது
மதுரை: வீட்டில் தீ விபத்து நெஞ்சில் அடித்து கதறும் கூலித்தொழிலாளி
மதுரை பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், ஒரு ஏழைக் கூலித்தொழிலாளியின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. புதிய வீடு கட்டுவதற்காகக் கடனாகப் பெற்ற 5 லட்ச ரூபாய் பணமும், மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளும் தீயில் கருகி உருகிவிட்டதாக அந்தத் தொழிலாளி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். உடுத்திக்கத் துணிமணிக்கூட மிஞ்சவில்லை என்றும், அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது தங்குவதற்கும் இடமில்லாமல் தவிக்கும் குடும்பத்தின் நிலை பரிதாபமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி