மதுரை: கணைய புற்றுநோய்க்கு அப்போலோ மருத்துவமனையில் புதிய சிகிச்சை

679பார்த்தது
இராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவருக்கு கண்டறியப்பட்ட கணையத் தலைப்பகுதி புற்றுநோய்க்கு, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை பல்துறை மருத்துவக் குழுவினர் 'பிலியோ-டைஜெஸ்டிவ் பைபாஸ்' அறுவை சிகிச்சையுடன் 'இன்ட்ரா-ஆப்பரேட்டிவ் மைக்ரோவேவ் அப்லேஷன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். டாக்டர் மதுசூதனன் கூறுகையில், 'மைக்ரோவேவ் அப்லேஷன் குறைந்த பாதிப்புடன் புற்றுநோய் திசுக்களை அழிக்க உதவுகிறது, முதியவர்களுக்கு விரைவான குணமடைதல், சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கிறது' என்றார். டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன், இந்த அப்லேஷன் முறையை ஒருங்கிணைத்ததன் மூலம் நோயாளியின் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது' எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி