மதுரை: புது பெண் மர்ம மரணம். போலீஸ் விசாரணை.

1பார்த்தது
மதுரை: புது பெண் மர்ம மரணம். போலீஸ் விசாரணை.
மதுரை வாடிப்பட்டி சாணம்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவரின் மனைவி ரூபினி தேவி (22), நேற்று (நவ. 6) மாலை வீட்டின் மாடிக்கு துணி காயப்போடச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ரூபினி தேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி