மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அருள்மிகு சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று (மே 24) தொடங்கியது. வரும் 26 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதை ஒட்டி இந்த சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால லட்சார்ச்சனை நடைபெறும். திங்கள்கிழமை லட்சார்ச்சனை நிறைவடைந்து, செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை சங்கல்பம் மற்றும் மகா யாகம் நடைபெறும்.