திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் திலீப்குமார் (16), அலங்காநல்லூர் சம்பக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது, மே 24 அன்று நண்பர்களுடன் கிணற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.