மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக சூர்யா என்ற இளைஞர் மீது முத்தையா அரிவாளாலும், அவரது மகன் விக்னேஷ் கத்தியாலும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தபால் நிலையம் அருகே நடந்துள்ளது. இது தொடர்பாக முத்தையாவை போலீசார் கைது செய்துள்ளனர், விக்னேஷை தேடி வருகின்றனர்.