அலங்காநல்லூர் அருகே கோயம்புத்தூரில்
வேலை பார்த்து வரும் கர்ணன் (49) நேற்று முன்தினம் (மே 23) இரவு கோவையிலிருந்து தனது சொந்த ஊரான இடையப்பட்டிக்கு குடும்பத்தினரை அனுப்பிவிட்டு, நள்ளிரவில் தனிச்சியம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது, இரண்டு டூவீலர்களில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.