அலங்காநல்லூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

0பார்த்தது
அலங்காநல்லூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று (பிப். 26) எஸ். டி. எம் நகை கடை நிறுவனத்தின் சார்பாக சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. வெங்கடேசன் எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி