மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதல். ஆசிரியர்கள் காயம்.

3பார்த்தது
மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதல். ஆசிரியர்கள் காயம்.
மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் (பிப். 9) மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். தடுக்கச் சென்ற ஆசிரியர்களையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர். தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி மாணவர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில், நேற்றும் (பிப். 10) மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி