மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16-வது வார்டு பகுதியில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீர் கால்வாயில் தேங்கி, தெருக்களில் செல்வதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த மக்கள் கழிவுநீர் செல்லும் கால்வாயை மண்ணைக் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.