மதுரை: அதிக மாத்திரைகள் சாப்பிட்டவர் மரணம்

1103பார்த்தது
மதுரை: அதிக மாத்திரைகள் சாப்பிட்டவர் மரணம்
மதுரை மாவட்டம் டி. மேட்டுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த 45 வயதான கதிரேசன், சர்க்கரை நோயால் வலது காலை இழந்த நிலையில், செயற்கைக் காலில் நடந்து வந்துள்ளார். வயிற்று வலி அதிகமானதால் விரக்தியடைந்த அவர், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.