மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நாததப்பநாயக்கன்பட்டி பாண்டியன் நகரில் வசிக்கும் ராஜ்மோகன் என்பவரின் 17 வயது மகள் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவர் நேற்று கடைசி தேர்வுக்கு எழுத பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மார்ச் 25) இரவு அவரது தாயார் கனிமொழி வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிளஸ் டூ மாணவியை தேடி வருகின்றனர்.