சோழவந்தானில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

82பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று (மே 18) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். இதில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருவார். முக்கிய நிகழ்வுகளான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வு ஒன்பதாவது நாளான மே 26 அன்றும், பூக்குழி இறங்கும் நிகழ்வு பத்தாவது நாளான மே 27 அன்றும் நடைபெறும். தொடர்ந்து ஜூன் 2 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி