மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள ஒரே ஒரு இந்தியன் ஆயில் எரிவாயு நிரப்பு நிலையம் முழுமையாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே இடத்திற்கு திரண்டு வருகின்றன. அதிகாலை முதலே வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், சில நேரங்களில் பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.