மதுரை நகரம் - Madurai City

சாலையில் ஆறு போல் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி.

மதுரை அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் ராட்சத கழிவுநீர் குழாய் இன்று (ஜூன். 30) உடைந்தது. இதனால் திருப்பரங்குன்றம் செல்லும் சாலைகளில் கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. மதுரை மாநகராட்சி 72 வார்டுகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரக்கூடிய குழாய் உடைப்பால் இந்த கழிவுநீர் வெளியேறி வருகிறது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இந்த குழாய் உடைப்பை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా