மதுரை: 70 கிலோ கஞ்சா கடத்தல்; தந்தை மகன் கைது

மதுரை மாவட்டம் கரடிக்கல் பகுதியில் 2021ம் ஆண்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 70கிலோ அளவு கஞ்சா விற்பனை செய்யும் நோக்கத்தில் கடத்தி வந்த திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த அழகுபாண்டி, அவரது மகன் முத்துப்பாண்டி, சேதுபதி மற்றும் தேனியை சேர்ந்த ராஜபிரபு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் உள்ளிட்ட 4பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.