மதுரை அரசு பெண்கள் பள்ளி கழிவறையில் 5 அடி புகுந்த பாம்பு

3பார்த்தது
மதுரை அரசு பெண்கள் பள்ளி கழிவறையில் 5 அடி புகுந்த பாம்பு
மதுரை யானைமலை அருகே உள்ள உலகனேரி அரசு மாதிரிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் பாம்பைக் கண்டு அலறியடித்து ஓடினர். ஆசிரியர்கள் மாணவிகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரன் வந்து பாம்பைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் பாம்பு கண்டதால், புதர்கள், எலி தொல்லை, தேவையற்ற பொருட்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி