மதுரை: துப்பறியும் நாய் படைப்பிரிவுக்கு புதிதாக வந்த நாய்க்குட்டி

60பார்த்தது
மதுரை: துப்பறியும் நாய் படைப்பிரிவுக்கு புதிதாக வந்த நாய்க்குட்டி
மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்து 40 நாட்களே ஆன லேபரடார் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி ஒன்று வாங்கப்பட்டுள்ள நிலையில் மாநகர காவல் காவல் ஆணையர் லோகநாதன் "புகழ்" என பெயர் சூட்டினார். ஏற்கனவே துப்பறியும் நாய் படை பிரிவில் ஏழு நாய்கள் பராமரிக்கப்பட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் காவல்துறை புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த லேபரடார் நாய் குட்டியை பத்து மாதங்கள் வரை நன்றாக வளர்க்கவும் அதன் பின்னர் போதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு தடுப்பு சம்பந்தமான பயிற்சிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.