மதுரை: இலவச வீடு; ஆட்சியரிடம் மனு அளித்த ஆதிதிராவிட மக்கள்

63பார்த்தது
மதுரை: இலவச வீடு; ஆட்சியரிடம் மனு அளித்த ஆதிதிராவிட மக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் அரசிடம் இலவச வீடு கேட்டு பலமுறை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

தங்கள் பகுதிக்கு அரசு வீடுகள் வழங்கப்பட்டதாக கூறுவதாகவும், ஆனால் அந்த வீடுகள் எங்கு இருக்கின்றன என கேட்டால் யாரும் பதில் அளிப்பதில்லை என கூறியும், சொக்கதேவன்பட்டி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி