தொற்றுநோய் பரப்பும் பஸ் ஸ்டாண்டாக மாறிய அண்ணா பஸ் ஸ்டாண்ட்

6பார்த்தது
மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா பேருந்து நிலையம், நேற்று பெய்த கனமழை காரணமாக மழைநீரோடு கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள், குறிப்பாக பெண்கள், பேருந்து நிலையத்திற்குள் செல்லவும், பேருந்துகளில் ஏறவும் மிகவும் சிரமப்படுகின்றனர். பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள மதுபான கடைகளால் போதையில் சிலர் நிர்வாண கோலத்தில் படுத்து உறங்குவதோடு, ஆபாசமாக பேசுவதாகவும் பெண்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. மாநகராட்சியின் சாதனையாக அண்ணா பேருந்து நிலையம் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். துர்நாற்றத்தால் நோய் பரவும் பகுதியாக மாறி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி