சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர், தேமுதிக செயலாளர் சந்திப்பு
மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது தாயார் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தாயார், அண்ணியார் அண்மையில் உயிரிழந்த துக்க நிகழ்வை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும் உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தெரிவிப்பார் என்றும், இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் அவர் கூறினார்.