மதுரை: ஊதியம் வழங்க கோரி எயூடி - மூட்டா இணைந்து போராட்டம்

76பார்த்தது
மதுரை: ஊதியம் வழங்க கோரி எயூடி - மூட்டா இணைந்து போராட்டம்
கல்லூரிப் பேராசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 பிறப்பிக்கப்பட்டு நான்கு வருடங்களில், அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் நிலுவைத் தொகையோடு வழங்கப்பட்டுவிட்ட பின்னரும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. 

உரிய ஊதியம் வழங்கக் கோரி எயூடி மற்றும் மூட்டா இணைந்து தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 15)  காலை 10 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் எதிரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி