மதுரை மீனாட்சி கோவில் அருகே சிறுவன் கொலை; 5 பேர் கைது

958பார்த்தது
மதுரை மீனாட்சி கோவில் அருகே சிறுவன் கொலை; 5 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன பார்க்கிங் பகுதியில் சிறுவன் குபேந்திரன் (17) கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் குபேந்திரன் தரப்பு ரவுடி முத்துமணியை தாக்கியதால், அவமானத்தை துடைக்க பழிவாங்க இந்த கொலை நடந்ததாக விளக்குத்தூண் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சொத்தல் முத்துமணி, அவரது தம்பி ராஜ், மற்றும் நண்பர்களான சதீஷ், ஹரிகிஷன், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி