மயானத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு

0பார்த்தது
மயானத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் தத்தனேரி மயான வளாகத்தில் ரூ. 10 கோடியில் நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்கும் மாநகராட்சி திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளப்படாததும், காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்படாததும், குடியிருப்புக்கு அருகில் இருப்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் வைகை ஆற்றை மாசுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி