மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் இன்று (மே. 30) மதுரை
போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, உதவி ஆணையரின் பணியினைப் பாராட்டி பொன்னாடை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நெகிழ்ச்சியுடன் பேசிய உதவி ஆணையர் செல்வின், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.