தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள பால்வண்ணநாதர் கோயில் சுற்றுச்சுவரைச் சுற்றி வணிக வளாகம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். கோயிலின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகவும், வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயிலைச் சுற்றி காலியிடம் உள்ளது என்பதற்காக வணிக வளாகம் கட்டுவதை ஏற்க முடியாது என்றும், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.