நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பாஜக அரசுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை குரு தியேட்டர் அருகில் புதனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர் மதுக்கூர் இராமலிங்கம், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன், கே.இராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று நாடாளுமன்ற ஜனநாயக குரல்வளையை நெறிக்காதே! என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.